பேங்காக், டிசம்பர் 21 (பெர்னாமா) -- 11 நாள்களுக்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டி நேற்றிரவு பேங்காக் ராஜாமங்களா அரங்கில் அதிகாரப்பூர்வமாக நிறைவுற்றது.
2027ஆம் ஆண்டில் மலேசியா 34வது சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது.
'The Sound of Whistle' எனும் அங்கத்துடன் தொடங்கிய இந்நிறைவு விழாவில் தாய்லாந்து நட்சத்திர பாடகர்கள் 'Rak Nak Naen' எனும் பாடலைப் பாடினர்.
நிறைவு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பில் மலேசியாவைப் பிரதிநிதித்து 80 விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் செபாக் டக்ரா வீரர் ஃபர்ஹான் ஆடம் ஜாலூர் கெமிலாங்கை ஏந்திச் சென்றார்.
தாய்லாந்தின் துணைப் பிரதமர், தமநாட் ப்ரொம்பௌ உரையாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சீ விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்து வைத்தார்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு (SEAGF) மற்றும் 2025 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான கொடிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமட் டௌஃபிட் ஜொஹாரி மற்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றம் MOMமின் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் னோர்ஸா ஜக்காரியா பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே, மலேசியா 'Rhythm of Harmony' பகுதியை வழங்கியதில் உள்நாட்டு கலைஞர் Mimi Fly மற்றும் 60 நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தியது.
தாய்லாந்தில் நடைபெற்ற 33வது சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 57 தங்கம், 57 வெள்ளி மற்றும் 117 வெண்கலப் பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)