ஜெனீவா, 25 டிசம்பர் (பெர்னாமா) -- சுகாதார அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு உலகளவில் பல நல்ல மாற்றங்களை அளித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் WHO-வுக்கு வழங்கப்படும் நிதியை மீட்டுக் கொள்வது மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் WHO-வின் முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக அதன் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் கூறுகிறார்.
"2025-ஆம் ஆண்டு இதர கடுமையான சவால்களைக் கொண்டு வந்தது; நிதி உதவியை நிறுத்திய நடவடிக்கை பல ஆண்டுகள் முன்னேற்றத்தைத் தலைகீழாக மாற்றும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தன. ஆரம்ப மதிப்பீடுகள் இந்த நூற்றாண்டில் முதல் முறையாகக் குழந்தை இறப்பு அதிகரிக்கக்கூடும் என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டங்களில், நிதி உதவி நிறுத்தம் எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகின்றன", என்றார் அவர்.
இதனிடையே நாடுகள் பிரிவினைக்கு பதிலாக ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது பல உதவிகள் வழங்க முடியும் என்பதை இவ்வாண்டு நிருபித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நோய்களை நீக்குவதற்காக WHO 13 நாடுகளை அங்கீகரித்ததாகவும், எச்.ஐ.வி மற்றும் உடல் பருமனுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட வழிகாட்டுதலை வெளியிட்டதாகவும், காசா, சூடான் மற்றும் உக்ரேன் உள்ளிட்ட 79 நாடுகளில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் WHO சேவையாற்றியதையும் தெட்ரோஸ் சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான பல முயற்சிகளில் WHO தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)