உலகம்

நைஜீரியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஐவர் பலி

26/12/2025 01:54 PM

மைடுகுரி, 26 டிசம்பர் (பெர்னாமா) --  நைஜீரியா, மைடுகுரி எனும் நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.

கடந்த புதன்கிழமை மாலை நேர தொழுகையின் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இத்தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

அந்நாட்டின் கிளர்ச்சி அமைப்புகளான போகோ ஹராம் மற்றும் அதன் ISWAP பிரிவு, பொதுமக்கள், மசூதிகள் மற்றும் சந்தைகளை குறிவைத்து கடந்த 15 ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)