உலகம்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மியன்மாரில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதற்கட்ட பொதுத் தேர்தல்

26/12/2025 02:01 PM

யங்கூன், 26 டிசம்பர் (பெர்னாமா) --  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மியன்மாரில் முதற்கட்ட பொதுத் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தேர்தல் அந்நாட்டின் பலவீனமான ஜனநாயகத்தை மீட்டெடுக்கவோ அல்லது இராணுவத்தின் கடுமையான ஆட்சியால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ உதவாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்திருகின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவ ஆட்சியைச் சட்டபூர்வமாக்கும் முயற்சி இதுவென்றும் அவர்கள் சாடினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாவது கட்டம் ஜனவரி 11 ஆம் தேதியும், மூன்றாவது கட்டம் ஜனவரி 25 ஆம் தேதியும் நடைபெறும் என்று இராணுவம் அறிவித்திருக்கிறது.

2021-ஆம் ஆண்டு ஆங்சான் சூச்சியின் அரசாங்கத்தை கவிழ்த்து, இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

மேலும், நீதிமன்ற வழக்குகளால் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து, இராணுவத்தை எதிர்க்கும் பொருட்டு அந்நாட்டில் பல கிளர்ச்சி படைகள் உருவெடுத்தன.

அதனை எதிர்க்கும் பொருட்டு இராணுவம் கடுமையான ஒடுக்கு முறையைக் கையாண்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)