கோலாலம்பூர், டிசம்பர் 27 (பெர்னாமா) -- இன்று சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியாவிற்கு இடையிலான உடனடி போர் நிறுத்தத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
சண்டையை நிறுத்துவதோடு படைகளைத் தங்கள் இடத்திலேயே நிலைநிறுத்த எடுத்த முடிவானது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கூட்டு உணர்வைப் பிரதிபலிப்பதாக அன்வார் கூறினார்.
போர் நிறுத்தத்துடன் கூடிய கூட்டு அறிக்கை ஆசியான் பார்வையாளர் குழுவின் சரிபார்ப்பு மற்றும் தற்காப்பு அதிகாரிகளுக்கு இடையே நேரடி தொடர்பு உள்ளிட்ட நடைமுறை மற்றும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இந்த முயற்சிகள் நிலைத்தன்மைக்கு ஒரு அடித்தளத்தை வழங்குவதோடு இரு தரப்பினரும் அவற்றை உண்மையாக நிறைவேற்றுவார்கள் என்று அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி நள்ளிரவில் ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியா பிலிப்பை ஒப்படைக்கும்போது இந்த உறுதிமொழிகள் மதிக்கப்படுவதையும் அமைதியான வட்டாரமாக ஆசியானின் மரியாதை மற்றும் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மலேசியா ஆதரிக்கும் என்று அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)