நியூ யார்க், டிசம்பர் 27 (பெர்னாமா) -- அமெரிக்கா, நியூ யார்க்கை டெவின் புயல் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அம்மாநில ஆளுநர் கேத்தி ஹாசில் நேற்று அங்கு அவசரகால நிலையை அறிவித்தார்.
முன்னதாக அந்நாட்டின் தேசிய வானிலை சேவை வெள்ளிக்கிழமை பிற்பகல் டெவின் என்ற குளிர்கால புயல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.
இப்புயல் கிரேட் லக்ஸ் பகுதியிலிருந்து வடக்கு மத்திய அட்லாண்டிக் மற்றும் தெற்கு நியூ இங்கிலாந்து வரை சனிக்கிழமை காலை வரை ஆபத்தான பயண நிலைமைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 12.7 லிருந்து 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேற்கு பென்சில்வேனியாவில் பனிப்புயல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)