மினகாமி, டிசம்பர் 27 (பெர்னாமா) -- மத்திய ஜப்பானின் குன்ம மாவட்டத்தில் உள்ள ஒரு முதன்மை நெடுஞ்சாலையில் 56 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், 26 பேர் காயமடைந்ததாக ஜப்பானிய செய்தி நிறுவனம் NTV சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
மினகாமியில் உள்ள கான்-எட்சு விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மணி 7:30 அளவில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
பல வாகனங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகியதாகவும் கூறப்பட்டது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் மேற்கு தோக்கியோவில் உள்ள Chofu-வைச் சேர்ந்த 77 வயது பெண் என்று போலீசார் தெரிவித்தனர்.
பனி மூட்டமான வானிலையால் நிகழ்ந்த இவ்விபத்தில் விபத்துக்குள்ளான லாரிகள் விரைவுச் சாலையில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து அதன்பின் வந்த கார்கள் வழுக்கும் சாலை மேற்பரப்பில் நிறுத்த முடியாமல் போனது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)