பொது

இன்று தொடங்கி இரு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும்

27/12/2025 06:59 PM

கோலாலம்பூர், 27 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பினிலும் ஜோகூர் மெர்சிங்கிலும் இந்த வானிலை நிலவும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலத்தின் ஜெராந்துட், மாரான், பெரா ஆகிய பகுதிகளுக்கும் ஜோகூரின் செகாமாட், குளுவாங், கோத்தா திங்கி ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை அளவிலான கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று ஏழு மாநிலங்களிலும், லாபுவான் கூட்டரசு பிரதேசத்திலும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக்கில் பாத்தாங் பாடாங், பகாங்கில் கேமரன் மலை, லிபிஸ் மற்றும் நெகிரி செம்பிலானின் கோலா பிலா, ஜெம்போல், தம்பின் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்று மெட்மலேசியா கணித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)