விளையாட்டு

சவூதி புரோ லீக்; ரொனால்டோ அதிரடி

28/12/2025 04:48 PM

துபாய், டிசம்பர் 28 (பெர்னாமா) -- சவூதி புரோ லீக் காற்பந்து போட்டியில், அல்-நாசர் 3-0 என்ற கோல்களில் அல் அக்தூத் கிளப்பை தோற்கடித்தது.

அதில் இரு கோல்கள் அடித்து அரங்கின் கவனம் ஈர்த்த கோல் மன்னன் கிரிஸ்டியானா ரொனால்டோ, அல்-நாசர் கிளப்பின் சிறந்த அடைவு நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தினார்.

முதல் பாதி ஆட்டத்தில் கிரிஸ்டியானா ரொனால்டோ இரு கோல்கள் அடித்த வேளையில், அவ்வணியின் மூன்றாவது கோலை ஜோவோ பெலிக்ஸ் இரண்டாம் பாதியில் போட்டார்.

ரொனால்டோவின் காற்பந்து வாழ்வில் இது 955 மற்றும் 956-வது கோல்களாகும்.

இந்த வெற்றியின் வழி அல்-நாசர் தற்போது 10 ஆட்டங்களில் 10 வெற்றிகளைப் பெற்று லீக் வரலாற்றில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

அவ்வணி, இந்த பருவத்தில் மொத்தம் 33 கோல்கள் அடித்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)