விளையாட்டு

சபலென்காவை வீழ்த்திய நிக் கிரியோஸ்

29/12/2025 04:56 PM

துபாய், 29 டிசம்பர் (பெர்னாமா) -- Battle of the Sexes டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவின் நிக் கிரியோஸ், உலகின் முதல் நிலை வீராங்கனையான அரியானா சபாலென்கா ஆகியோர் களமிறங்கினர்.

இன்று அதிகாலை, துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நிக் கிரியோஸ், 6-3, 6-3 என்ற நேரடி செட்களில் அரியானா சபாலென்கா-வை வீழ்த்தினார்.

ஆணும் பெண்ணும் விளையாடுவதே இப்போட்டியின் சிறப்பாகும்.

2021 ஆம் ஆண்டு முன்னாள் காதலியைத் தாக்கியதாகநிக் கிரியோஸ் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு அவருக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

அந்த எதிர்ப்புகளை மீறி, அவர் இப்போட்டியில் அரியானா சபாலென்கா-வுடன் விளையாடினார்.

2022 விம்பிள்டன் வெற்றியாளரான நிக் கிரியோஸ், கடந்த மூன்று பருவங்களில் ஆறு தொடர் போட்டிகளில் மட்டுமே விளையாடி தற்போது உலக தரவரிசையில் 671வது இடத்தில் உள்ளார்.

இருப்பினும், 30 வயதான அவர் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் அரியானா சபாலென்கா தோற்கடித்து தமது திறனை நிரூபித்திருக்கிறார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)