பொது

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் முகிடின்

30/12/2025 12:57 PM

கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் முகிடின்

அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருப்பதை அதன் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் இன்று உறுதிபடுத்தினார்.

இப்பதவி விலகளுக்கான காரணத்தைக் குறிப்பிடாமல் தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் முகிடின் இம்முடிவை அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனலில் தமது தலைமைத்துவக் காலம் முழுவதிலும் தமக்கு ஆதரவு வழங்கிய அக்கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் முகிடின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்துவமும் அதன் உறுப்புக் கட்சிகளும் தொடர்ந்து முன்னோக்கி செயல்பட அவர் தமது வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டார்.

நேற்று நள்ளிரவு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை முகிடின் இறுதி செய்ததாகவும் அக்கூட்டணியின் உச்சமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் பெர்சத்துவின் மூத்த தலைவர் ஒருவர் பெர்னாமாவிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)