புத்ராஜெயா, 30 டிசம்பர் (பெர்னாமா) -- எந்தவொரு கீழறுப்பு வேலை அல்லது துரோகமும் இல்லாமல், மடானி அரசாங்கத்தில் ஒருமைப்பாடு தொடர்ந்து உறுதியாக உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தில் மிகவும் நேர்மையான ஒருமித்த கருத்து உள்ளதாகவும், எந்தவொரு தரப்பின் பெயரையும் வெளிப்படுத்தாமல், மற்ற அரசியல் கூட்டணிகளில் நடப்பதைக் காட்டிலும் வேறுபட்டது என்றும் நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
''மடானி ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து மிகவும் நேர்மையானது. மற்ற நண்பர்களுக்கு நடப்பதைப் போன்ற நாசவேலை அல்லது துரோக முயற்சிகள் எதுவும் இல்லை என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,'' டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், பெரிகாத்தான் நேஷனல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)