பொது

போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக சீனாவைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

31/12/2025 03:36 PM

ஜார்ஜ்டவுன், 31 டிசம்பர் (பெர்னாமா) -- டிசம்பர் மாத இறுதியில், போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக சீனாவைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் நட்ரதுன் நயிம் முஹமட் சைடி முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு மெண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 38 வயதுடைய ஸீ சௌஜி, 32 வயதுடைய சாங் மியா மற்றும் 36 வயதுடைய சென் செங் ஆகியோர் அதைப் புரிந்ததாக தலையசைத்தனர்.

எனினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

டிசம்பர் 20ஆம் தேதி இரவு மணி 10க்கு, Adorna Gold வளாகத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில், 26.025 கிலோகிராம் மெதஃபெதமைன் வகை போதைப்பொருளை விநியோகித்ததாக அவர்கள் மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபனமானால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 12 முறைக்கும் குறையாத பிரம்படி ஆகியவை தண்டனையாக விதிக்க வகை செய்யும்
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B(1)(a), தண்டனை விதிக்க வழிவகுக்கும், அதே சட்டம், செக்‌ஷன் 39(B)(2) மற்றும் அவற்றுடன் வாசிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் மறு செவிமடுப்பு பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)