பொது

கட்டுமானத் தள விபத்தில் இந்தோனேசிய ஆடவர் பலி

31/12/2025 03:40 PM

கோத்தா திங்கி, 31 டிசம்பர் (பெர்னாமா) -- ஜோகூர், பண்டார் பெனாவரில், நேற்று, கழிவுநீர் தொட்டியைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​சுமார் மூன்று மீட்டர் ஆழத்திற்கு நிலச்சரிவில் புதையுண்டு இந்தோனேசிய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

கட்டுமானப் பணிகளில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் முன்புறத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 52 வயதுடைய அந்நபர் மரணமடைந்ததாக, உதவி தீயணைப்புத் தலைவர், மூத்த நடவடிக்கை கமெண்டர் முஹமட் கைருல் சுஃபியான் டஹாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து நண்பகல் மணி ஒன்றுக்கு தமது தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் கூறினார்.

குழாய் பொறுத்தும் பணியாளர்கள் இருவர் அதில் விழுந்த வேளையில், 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் அதிர்ஷ்ட்டவசமாக உயிர்த் தப்பியதாகவும், இந்தோனேசிய ஆடவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரணமடைந்தவரின் உடல் மாலை மணி நான்கிற்கு வெளியில் கொண்டு வரப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)