பொது

சரவாக் வெள்ளம்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 380-ஆக உயர்வு

31/12/2025 05:16 PM

கூச்சிங், 31 டிசம்பர் (பெர்னாமா) -- சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை வரை அதன் எண்ணிக்கை 197-ஆக இருந்த வேளையில், மாலை நிலவரப்படி, 97 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூச்சிங்கிற்கு அருகிலுள்ள தாமான் டேசா வீரா மற்றும் கம்போங் சினார் பூடி பாரு பகுதிகளை உட்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் இரு தற்காகலிக நிவாரண மையங்களில் தங்கவக்கப்பட்டுள்ளதாக சரவாக் மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு JPBN தெரிவித்தது.

ஸ்டாபோக் சமூக மண்டபத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 199 தங்கியுள்ள நிலையில், கம்போங் சினார் பூடி பாரு மையத்தில், 44 குடும்பங்களைச் சேர்ந்த 181 பேர் தங்கியுள்ளதாக JPBN இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

சரவாக்கில் இன்று தொடங்கி நாளை வரை பல பகுதிகளுக்கு. மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தொடர் மழை எச்சரிக்கையை விடுத்தது.

கூச்சிங், செரியான், சமரஹான், ஶ்ரீ அமான் மற்றும் பெதோங் ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா நேற்று கணித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)