விளையாட்டு

ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டி; 55 தங்கப் பதக்கங்கள் இலக்கு

02/01/2026 05:28 PM

கோலாலம்பூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- 2026 ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மலேசிய அணியினர், மொத்தமாக 55 தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

கம்போடியாவில் நடைபெற்ற முந்தைய போட்டியில் மலேசியா பெற்ற 50 தங்கப் பதக்கங்களை விட இந்த இலக்கு அதிகமாகும்.

சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோடு, சில தொழில்நுட்ப சவால்கள் இருந்தாலும், அதனை அடைய முடியும் என்று 2025 பாரா தேசியக் குழுத் தலைவர்முஹமட் ஸர்ராவி ரவி அப்துல்லா கூறினார்.

''கம்போடியாவில் நாம் 50 தங்கப் பதக்கங்கள் வென்றதை ஒப்பிட்டால், இந்த முறை முன்னேற்றம் அவசியம். இதில் எவ்வித சமரசமும் இல்லை. எனவே 50-ஐ விட அதிகம் என்பது நியாயமானது. எங்கள் திட்டமிடல் அனைத்தும் சரியாக நடைமுறைக்கு வந்தால், 55 தங்கப் பதக்கங்களை இலக்காக நிர்ணயிப்பது பொருத்தமானதே,'' என முஹமட் ஸர்ராவி ரவி அப்துல்லா கூறினார்.

மலேசிய அணியின் தயார்நிலை தற்போது 100 விழுக்காட்டில் இருப்பதாகவும்,
இம்மாத மத்தியில் தொடங்கவுள்ள அந்த விளையாட்டு போட்டியை முன்னிட்டு,
விளையாட்டு வீரர்கள் போராட்ட உணர்வுடன் இருப்பதாக அவர் கூறினார்.

மொத்த இலக்கில், நீச்சல் மற்றும் தடகளம் ஆகிய விளையாட்டுகள் மலேசியாவுக்கு தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வழங்கும் முக்கிய பிரிவுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முஹமட் ஸர்ராவி ரவி அப்துல்லா கூறினார்.

பாரா விளையாட்டு வீரர்கள் அடுத்த வாரம் இறுதி கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 15-ஆம் தேதி அவர்கள்
புறப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)