சிலாங்கூர், ஜனவரி 3 (பெர்னாமா) -- கிழக்கு கிள்ளான் நெடுஞ்சாலையின் சுங்கை லோங் டோல் சாவடி பகுதியில் மரக்கட்டை என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளை கையில் பிடித்து இருவர் சண்டையிட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 9.08-க்கு தங்கள் தரப்பிற்கு புகார் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நஸ்ரோன் அப்துல் யூசொப் கூறினார்.
நேற்று காலை 9 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாகவும் இதனால் மற்ற நெடுஞ்சாலை பயனர்களுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாகவும் நஸ்ரோன் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 48 உட்பிரிவு-1 மற்றும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 506-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
மேலும், சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களையும் தேடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நஸ்ரோன் கூறினார்.
அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொண்டு புகாரளிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)