புத்ராஜெயா, ஜனவரி 05 (பெர்னாமா) -- ரியவர்களுக்கான மாதாந்திர ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா ஜனவரி 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் வேளையில் 500 ரிங்கிட் வரைக்குமான முதலாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆர் ஜனவரி 20ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மலேசியருக்கும் சாரா பிப்ரவரி 9 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
''18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இரண்டு கோடியே 20 லட்சம் மலேசியர்களுக்கு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நாங்கள் வழங்குவோம். இது ரமலான் கரீமுக்குச் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குமான தயார்நிலைக்கு ஆகும்'', என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
37 லட்சம் குடும்பங்கள் துணை இல்லாத 13 லட்சம் முதியவர்கள் 31 லட்சம் திருமணமாகாதவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மாதாந்திர சாரா தொகை 50 லிருந்து 200 ரிங்கிட் வரை பிரிவுகளின் படி வழங்கப்படும் என்று நிதியமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
81 லட்சம் பேரை உள்ளடக்கிய 2026ஆம் ஆண்டு மாதாந்திர சாரா உதவித்தொகை 800 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் இது 54 லட்சம் பேரையும் 500 கோடி ரிங்கிட்டையும் உள்ளடக்கி இருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)