புத்ராஜெயா, ஜனவரி 06 (பெர்னாமா) -- அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு மறைமுக முயற்சியிலும் அம்னோ ஈடுபடாது.
இந்த நிலைப்பாடு நிலையானது என்றும் நடப்பு ஆட்சியின் தவணைக்காலம் நிறைவடையும் வரை அம்னோ அரசாங்கத்துடன் இணைந்தே செயல்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கின்றார்.
''மாநிலங்களின் அனைத்து பிரதிநிதிகளும் தங்களின் கருத்துகளை முன்வைத்ததை நான் கேட்டுள்ளேன். இருப்பினும், இது தெளிவாக ஆராயப்பட வேண்டும். ஏனெனில், தொடக்கம் முதலே எனக்கு ஒரு உறுதியான நிலைப்பாடு உள்ளது. கட்சிக்கும் ஆரம்பம் முதலே ஒரு நிலைப்பாடு உள்ளது. தற்போதைய அரசைக் கவிழ்க்கும் எந்தவொரு மறைமுக செயலிலும் நாங்கள் ஒருபோதும் ஈடுபடமாட்டோம். பதவிக்காலம் முடியும் வரை இந்த ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒன்றாக இருப்போம்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.
நேற்று அம்னோ அரசியல் பிரிவு கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து அவர் கருத்துரைத்தார்.
எந்தவொரு விவாதமும் கட்சிக்குள் வெளிப்படையாக நடத்தப்படும் என்று கூறிய அவர் அரசியல் நிலைத்தன்மையைப் பாதிக்கக்கூடிய கடந்தகாலத் தவறுகள் மீண்டும் நிகழாதவாறு அம்னோ மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் வலியுறுத்தினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)