புத்ராஜெயா, 08 ஜனவரி (பெர்னாமா) -- உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி மற்றும் விலையைப் பாதிக்கக்கூடிய வெனிசுலா போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உட்பட, உலகளாவிய புவிசார் அரசியல் நிலவரங்களை மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றது.
அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிற்கு இடையில் நிலவி வரும் விவகாரம் உட்பட, நிச்சயமற்ற புவிசார் அரசியல் தன்மைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அவை 2026-ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு சவால்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
''அந்நிகழ்வின் தாக்கத்தை எல்லோரும் இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது காத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே, பெரும்பாலான மக்கள் அத்தகைய நிகழ்வின் விளைவைக் கணிக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக பொருளாதார அமைச்சிற்கு, நான் என் உரையில் சொன்னது போல் பொருளாதார அமைச்சின் கவனம் ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தை உறுதி செய்வதாகும். 13-வது மலேசியா திட்டம் அமல்படுத்தப்படும். அதை செயல்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார் அவர்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பொருளாதார அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]