பூச்சோங், 08 ஜனவரி (பெர்னாமா) -- தேசிய பேரிடர் நிர்வகிப்பு மன்றத்தை, அமைச்சரவையின் சிறப்பு செயற்குழுவாக உருவாக்க தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா பரிந்துரைத்துள்ளது.
பேரிடர்கள் தொடர்பான வியூக முடிவுகளை மிகவும் ஒருங்கிணைந்த, முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான முறையில் எடுக்க மத்திய மற்றும் மாநிலத் தலைமைத்துவத்தின் நேரடி ஈடுபாட்டிற்கு இந்நடவடிக்கை வழிவகுக்கும் என்று துணைப் பிரதமரும் மத்திய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
''மேலும் தற்போது, நடப்பிலுள்ள குழுவில் மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களின் நேரடி பங்கேற்பு இன்னும் இல்லை. நில பயன்பாட்டு மேம்பாடு மற்றும் நீர்வள நிர்வகிப்பில், மாநில அரசு முக்கிய அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், ஆபத்து மற்றும் தாக்கத்தின் அளவைப் பெரிதும் பாதிக்கும் முக்கிய அம்சங்களும் உள்ளன,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பூச்சோங், Pulau Meranti-யில் உள்ள ஸ்மார்ட் குழு தலைமையகத்தில் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவன ஊழியர்களுக்கு 2026 புத்தாண்டு வாழ்த்து உரையை வழங்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் குழுவின் சிறந்த பதிவின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அனைத்துலக தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு, INSARAG-கின் வெளிப்புற மறுவகைப்படுத்தல், IER-இல் இருந்து, கனரக நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவாக ஸ்மார்ட் குழுவின் அங்கீகாரத்தை மீண்டும் பெறும் திறனில் டாக்டர் அஹ்மட் சாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)