இஸ்தான்புல், ஜனவரி 09 (பெர்னாமா) -- நேற்று நிறைவடைந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூன்று நாள்கள், துருக்கிக்கான அதிகாரப்பூர்வ பயணம், உயர்மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றம், எச்.எல்.எஸ்.சி.சி நிறுவப்பட்டதன் மூலம் முக்கியமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை, அங்காராவில் உள்ள அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற எச்.எல்.எஸ்.சி.சி கூட்டத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிமும், துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan-உம் தலைமையேற்றனர்.
அக்கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகளின் வலிமையையும், அனைத்துலக நன்மைக்காக முதலீடு, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வியூக ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதிபலிப்பதாக, அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"இது ஈர்க்கக்கூடிய தொடக்கமாகும். ஏனென்றால் அந்த மட்டத்தில் இருதரப்பு உறவுகளைக் கொண்ட நாடுகள் அதிகம் இல்லை. ஏனெனில் இந்த உயர் மட்டக் குழுவில், அதிபரும் நானும் சேர்ந்து செய்த ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும். நிச்சயமாக, எங்கள் முடிவுகளை அமைச்சர்கள் செயல்படுத்துவார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான வியூக முடிவுகளை அவர்கள் செயல்படுத்துவார்கள்," என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இருதரப்பு உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதோடு, புதிய அத்தியாயத்தைக் குறிக்கும், எச்.எல்.எஸ்.சி.சி நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனத்திலும் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அதோடு, எச்.எல்.எஸ்.சி.சி நிறுவப்பட்டதன் மூலம், மிக உயர்ந்த மட்டத்தில் வியூக ஒத்துழைப்பை நிறுவ துருக்கி நம்பியிருக்கும் ஒரு சிறிய நாடுகளின் குழுவில் மலேசியாவை வைத்திருப்பதாக, அலுவல் பயணத்தை நிறைவுச் செய்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)