விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்; ஜோகூர் ஜே.டி.தி நெகிரி செம்பிலான் எஃப்.சி-யைத் தோற்கடித்தது

10/01/2026 03:03 PM

சிரம்பான், 10 ஜனவரி (பெர்னாமா) --  மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகூரின் ஜே.டி.தி 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் நெகிரி செம்பிலான் எஃப்.சி-யைத் தோற்கடித்தது.

இதன் வழி இப்பருவத்தில் இதுவரை நடைபெற்ற 14 ஆட்டங்களிலும், ஜே.டி.தி அணி தோல்வியற்ற சாதனையைத் தொடர்கிறது.

சிரம்பான் பாரோயில் தனது சொந்த அரங்கில் விளையாடிய நெகிரி செம்பிலான் எஃப்.சி,வெற்றி பெரும் இலக்கில் கடுமையான போராடியது.

அதுபோலவே, ஜே.டி.தி-யும் விளையாட நேர்ந்ததில் மூர்க்கத்தனமான ஆட்டத்தால் இரு அணிகளைச் சேர்ந்த இரு ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை மிக லாவகமாக சாதகமாக்கி ஜே.டி.தி வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின் வழி ஜே.டி.தி 42 புள்ளிகளோடு பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)