அம்பாங், 10 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஈராண்டுகளில், அமலாக்க நிறுவனங்களின் அடைவுநிலை, குறிப்பாக உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் மிகவும் பாராட்டுக்குரிய நிலையில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில், மலேசிய ஊழl தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என் மற்றும் மலேசிய குடிநுழைவுத்துறை போன்றவை உயர் உறுதிபாட்டைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
''கடந்த இரண்டு ஆண்டுகளையும், முந்தைய அமலாக்கத்தின் செயல்திறனையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் பாராட்டத்தக்கது என்று நினைக்கிறேன். நான் முழுமையாக திருப்தி அடைந்ததாக நான் கூறவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை உட்படுத்திய அனைத்து பெரிய சவால்களையும் நாங்கள் கடந்து வந்துள்ளோம்,'' என்றார் அன்வார்.
இன்று, தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பாண்டா பராமரிப்பு மையத்தில், புதிய பெரிய பாண்டா கரடி ஜோடியின் அறிமுக விழாவுக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
நாட்டின் நிர்வாகத்தில், கடப்பாட்டையும் நேர்மையையும் உறுதி செய்வதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பொது சேவை துறை ஊழியர்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)