விளையாட்டு

2026 ஆஸ்திரேலிய பொதுப் டென்னிஸ் போட்டி

16/01/2026 06:43 PM

ஆஸ்திரேலியா, 16 ஜனவரி (பெர்னாமா) --  ஆஸ்திரேலிய பொதுப் டென்னிஸ் போட்டி குறித்த தகவல்.

நடப்பு வெற்றியாளரான இத்தாலியின் யானிக் சின்னர், அப்பட்டத்தைத் தொடர்ச்சியாக மூன்றாவது முறை கைப்பற்றும் இலக்கில் உள்ளார்.

முதல் சுற்றில் உலக தரவரிசையில் 94-ஆம் இடத்தில் உள்ள பிரான்சின் ஹ்யூகோ காஸ்டனை அவர் எதிர்கொள்கிறார்.

போட்டியின் தொடக்க ஆட்டங்களை யானிக் சின்னர் எளிதாக கடந்து செல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, உலகத் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், முதல் சுற்றில் உபசரனை நாட்டின் ஆடம் வால்டன் உடன் மோதுகின்றார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலிய பொதுப் டென்னிஸ் போட்டிக்கான குலுக்கள் மெல்போர்ன் பார்க் அரங்கில் நடைபெற்றது.

இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றில் 10 முறை வெற்றியாளரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெஸைச் சந்திக்கிறார்.

இதனிடையே, மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அரினா சபலென்கா பிராஸ்சின் டியான்ட்சோவா ரகோடோமங்கா உடன் மோதவுள்ளார்.

இரண்டு முறை வெற்றியாளரான சபலென்கா பெரிய சவால்களை எதிர்கொள்ளாமல் காலிறுதிவரை முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ள வேளையில், போலாந்தின் இகா ஸ்வியாடெக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நடப்பு பெற்றியாளரான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள கடினமான சவால்களைக் சந்திக்கக்கூடும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)