சியோல், 16 ஜனவரி (பெர்னாமா) -- தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அந்நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்கும் முன்னர், அவர் முறையான செயல்முறைகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து, யூன் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறப்படுகிறது.
கிளர்ச்சியைத் தூண்டியதாகவும் யூன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரிக்கப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டு, தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை அறிவித்து, சில மணிநேரத்தில் அவர் அதனை மீட்டுக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)