பொது

வட மண்டலத்தில் மேக விதைப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது நட்மா

14/02/2026 04:56 PM

புத்ராஜெயா, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- கடுமையான வெப்பம் மற்றும் பல முக்கிய அணைகளில் நீர் மட்டம் குறைவதை நிவர்த்தி செய்வதற்காக, மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்றும் அரச மலேசிய ஆகாயப்படை, தி.யு.டி.எம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம்,, நட்மா, வட மண்டலத்தில் மேக விதைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

நேற்று தொடங்கி, கெடா மற்றும் பேராக்கில் உள்ள மழைநீர் சேமிப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை இன்றும் தொடரப்பட்டது.

உள்நாட்டு நீர் விநியோகம், தொழில் மற்றும் விவசாய நீர்ப்பாசனத்திற்கான முக்கிய ஆதாரங்களாக இருக்கும் பல அணைகளை இந்நடவடிக்கை உள்ளடக்கி உள்ளது.

கெடாவில், பெடு அணை அமைந்துள்ள பகுதியிலும், பேராக்கில் புக்கிட் மேரா அணை அமைந்துள்ள பகுதியிலும் கவனம் செலுத்தி மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தி.யு.டி.எம்-இன் C-130 ஹெர்குலஸ் ரக விமானம் மேக விதைப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)