கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டின் ஐந்தாவது தொற்றுநோயியல் வாரம் வரை நாடு முழுவதும் 503 புதிய காசநோய்ச் சம்பவங்கள் கண்டறியப்பட்டதன் வழி மொத்த நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 571-ஆக உயர்ந்துள்ளது.
614 நோய்ச் சம்பவங்களுடன் சபா மிக அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சபாவை தொடர்ந்து, சிலாங்கூரில் 476, சரவாக்கில் 257, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 202 நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிளந்தான், பகாங், திரெங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, பெர்லிஸ் மற்றும் லாபுவானிலும் காசநோய்ப் பரவி வருவதாக அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், பண்டிகைக் காலம் மற்றும் நீண்ட விடுமுறை என்தால் இருமல் மற்றும் தும்மலுக்கு எதிரான முறையான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சுவாசக் கவசம் அணிவதுடன், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)