பொது

விநியோகம், விலைகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய OPS PANTAU

15/02/2026 03:44 PM

கோத்தா கினாபாலு, 15 பிப்ரவரி (பெர்னாமா) --  பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, வரும் பிப்ரவரி 19 தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி வரை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு Ops Pantau சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இதில், சில்லறை விற்பனை வளாகங்கள், விவசாய சந்தைகள், இரவு சந்தைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், Bazar உட்பட இணைய விற்பனையும் அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

''இந்த Ops Pantau, ரமலான் மாதம் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் வரை கவனம் செலுத்தி, அடிக்கடி, இலக்கு வைக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை நடத்துவதற்கானது ஆகும்'', என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, சீனி, கோழி, முட்டை, சமையல் எண்ணெய் மற்றும் கோதுமை மாவு போன்ற அடிப்படைப் பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என்று டத்தோ அர்மிசான் விவரித்தார்.

பயனீட்டாளர்களின் வாங்கும், விற்கும் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தொடர்ந்து, இணைய வணிகத்திலும் Ops Pantau கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)