கோலாலம்பூர், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியின் லாருட், லெம்பா பந்தாய், கப்பாளா பத்தாஸ் மற்றும் தஞ்சோங் கிளைகள் கலைக்கப்பட்டதாக கூறப்படும் கூற்றை அக்கட்டியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
கட்சியின் நற்பெயரையும் கண்ணியத்தையும் சேதப்படுத்துவதோடு, கட்சியின் நிலைத்தன்மைக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஒரு சில தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீயச் செயல் இதுவாகும் என்று அவர் சாடினார்.
அந்தக் கூற்று அடிப்படையற்றது என்றும், கட்சியின் அரசியலமைப்பின் விதிகள் மற்றும் பொது பேரவை விதிகளுக்கு முரணானவை என்றும் அவர் கூறினார்.
கிளைத் தலைவர் உட்பட எந்தக் கட்சி உறுப்பினருக்கும் கட்சிக் கிளைகளைக் கலைக்கும் அதிகாரத்தை அதன் அரசியலமைப்பு வழங்கவில்லை என்று அஸ்மின் அலி விளக்கம் அளித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)