கோலாலம்பூர், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமின்றி, தெளிவையும் இலக்கையும் அடைய நோன்பின் தேவைகளையும் ரமலான் மாத நடைமுறைகளையும் புரிந்து கொள்ள இம்மாதத்தை இஸ்லாமியர்கள் ஆழமாக உணர வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
ரமலான் முழுவதிலும், நோன்பை மேற்கொள்வதில் ஊக்கத்துடன் மனக்கட்டுப்பாட்டு உணர்வும் அவசியம் என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மேற்கொள்ளப்படும் நோன்பு சுய ஒழுக்கத்தையும், பணிகளையும் தினசரி கடமைகளையும் முழுமனதுடன் நிறைவேற்றும் விருப்பத்தையும் அதிகரிப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இந்தப் நடைமுறைக்குப் பின்னால் உள்ள இன்பத்தின் உச்சம் பக்தியை அடைவதாகும்.
இது நோன்பின் மூலம் குணநலன்களை உருவாக்கும் செயல்முறை வழி செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நாளை, வியாழக்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு நோன்பு அனுசரிக்கப்படவிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)