உலகம்

உலகளாவிய வரி கட்டணங்களை 15 விழுக்காடாக டிரம்ப் உயர்த்துவார்

22/02/2026 04:02 PM

அமெரிக்கா, 22 பிப்ரவரி (பெர்னாமா) --  அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இதற்கு முன்னர் தாம் அறிமுகப்படுத்திய பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய வரி கட்டணங்களை 10-லிருந்து கூடுதலாக 15 விழுக்காடாக அதிபர் டோனல்ட் டிரம்ப் உயர்த்தவிருக்கின்றார்.

செக்‌ஷன் 122-இன் கீழ் இந்த அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று கூறிய டிரம்ப், இதற்கு முன்னர் உள்ள வரிகளுடன் ஒப்பிடுகையில் இது கூடுதலானதாகும் என்றும் தெரிவித்தார்.

சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் புதிய வரிகளைத் தமது நிர்வாகம் தீர்மானித்து அறிவிக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

தேசிய அவசரநிலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டத்தின் கீழ் அமெரிக்க டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த அதே வேளையில், சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பொரருள்களுக்கு விதிக்கப்பட்ட Fentanyl தொடர்பான வரிகளுக்கு அதிகபட்சமாக, உலகளாவிய வரிகளை விதிக்க 1977ஆம் ஆண்டின் அனைத்துலக அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் டிரம்ப் தமது அதிபருக்கான அதிகாரத்தை மீறியதாகவும் அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டிரம்ப் அறிமுகப்படுத்திய பெரும்பாலான வரிகளை ரத்து செய்யும் முடிவு 170 பக்க ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 விழுக்காட்டு வரி விதிக்கும் ஆவணத்தில் டிரம்ப் பின்னர் கையெழுத்திட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)