பொது

ஏ.டி.எம் கொள்முதல் நிதி குறித்து பரிசீலிக்க பிரதமர் இணக்கம்

24/02/2026 05:33 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 24 (பெர்னாமா) -- மலேசிய இராணுவப்படையின் கொள்முதல் நிதியை, அப்படையின் செயல்பாட்டுச் செலவுகளுக்காக வழங்குவது குறித்து பரிசீலிக்க பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

இன்று, விஸ்மா பெவிராவில் உள்ள மலேசிய இராணுவப்படை உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது நிதியமைச்சருமான அன்வார் இதனை அறிவித்ததாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

''தயார்நிலைப் பிரச்சனைகளையும் தொடர வேண்டிய செயல்பாடுகள் மற்றும் கொள்முதலை முடக்குவது போன்ற பிரச்சனைகளையும் தாம் புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இறுதியில், செயல்பாடுகள் மற்றும் தயார்நிலையைப் பாதிக்காத வகையில் கொள்முதல் போன்றவற்றை முடக்குவது குறித்து கவனமாக செயல்படுத்த வேண்டும். மேலும் இந்த விவகாரத்தை நாங்கள் விவாதித்தோம். இது போன்ட விவகாரங்களைக் கருத்தில் கொள்ளலாம் என்று பிரதமர் ஒப்புக்கொண்டார்,'' என்றார் அவர்.

ஊழல் பிரச்சனைகள் தொடர்பில் மலேசிய இராணுவப்படையும் அரச மலேசிய போலீஸ் படையும் எடுத்த அனைத்து கொள்முதல் முடிவுகளையும் தற்காலிகமாக முடக்க கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் அன்வார் உத்தரவிட்டிருந்தார்.

மலேசிய இராணுவப்படையில் பல முன்னாள் உயர் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)