பொது

வழிபாட்டுத் தலங்களை அமைப்பதில் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் - பகாங் சுல்தான்

25/02/2026 02:55 PM

தெமெர்லோ, 25 பிப்ரவரி (பெர்னாமா) --  பல்வேறு சமூகத்தின் நல்லிணக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு, வழிபாட்டு தலங்களை கட்டுவதில் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பகாங் மாநில சுல்தான், சுல்தான் பகாங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’அயாதுடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா உறுதியாக கூறியிருக்கின்றார்.

சட்டத்தைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது, விதிகளை மீறுவது மட்டுமின்றி இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் தவறான புரிதல்களையும் பதட்டங்களையும் ஏற்படுத்தும் என்றும் அல்-சுல்தான் அப்துல்லா தெரிவித்தார்.

சட்டம் என்பது கட்டுப்படுத்துவதற்காக அல்ல.

மாறாக, நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஒருங்கிணைப்பதற்கும் உறுதி செய்வதற்கும் என்று பகாங் சுல்தான் தெரிவித்தார்.

விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றாத எந்தவொரு தரப்பினரின் செயல்களும் சமூகத்தினரிடையே குழப்பத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஒழுங்கும் விதிகளைப் பின்பற்றுவதையும் மாநிலத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாறாக, சர்ச்சைகளைத் தூண்டும் நடவடிக்கைகள் அல்ல என்றும் அல்-சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)