பொது

விடுதி உட்பட தங்குமிட வளாகங்களில் தீ பாதுகாப்பு சோதனைகள் மேம்படுத்தப்படுகிறது

25/02/2026 04:37 PM

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டு மற்றும் நோன்பு பெருநாளுக்கான தயார்நிலை முயற்சிகள் வழி விடுதி உட்பட தங்குமிட வளாகங்களில் தீ பாதுகாப்பு சோதனைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, JBPM மேம்படுத்துகிறது.

மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது, தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுக்கும் தற்போது சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக JBPM-இன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்தார்.

கடந்த மூனறு ஆண்டுகளில் தங்களது துறையின் ஆய்வின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வளாகங்களில் தீ பாதுகாப்புக்கான சட்டங்களைப் பின்பற்றாதது 17 விழுக்காட்டில் இருந்து சுமார் 14 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளதாக Datuk Seri Nor Hisham Mohammad கூறினார்.

வளாகங்களைக் கண்காணிப்பதைத் தவிர்த்து, எந்தவொரு சம்பவத்திற்கும், குறிப்பாக பண்டிகை காலங்களில் உடனடியாக பதிலளிப்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் JBPM செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''நெரிசல் ஏற்படும் என்று நாங்கள் கணிக்கும் இடங்களுக்கு அரை மணி நேரத்திற்குள் பதிலளிக்க உதவும் வகையில், கணிக்கப்பட்ட இடங்களில் குழுக்கள் தயார்நிலையில் இருக்கும்,'' என்றார் அவர்.

அண்மையில், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கியதால், உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நீர் நடவடிக்கைகள் சார்ந்த சுற்றுலா தளங்களில் JBPM ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)