பொது

ரவாங் பெர்டானாவில் உள்ள ஆலயச் சிலைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை சுமூகமாக நடந்தது

25/02/2026 04:50 PM

ரவாங், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- நேற்றிரவு, ரவாங், தாமான் ரவாங் உள்ள ஶ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தும் செயல்முறையை ஆலய நிர்வாகத்தினர் சுமூகமாக மேற்கொண்டனர்.

இரவு மணி 9.30 முதல் இன்று அதிகாலை மணி 4.12-க்குள் அச்சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு, கோம்பாக்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசேலி கஹார் தெரிவித்தார்.

அச்செயல்முறையின்போது, எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும், அங்குள்ள நிலைமையை அரச மலேசிய போலீஸ் படை தரப்பு கண்காணித்தது.

பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய பத்து பேர்,
கோவிலில் உள்ள நான்கு சிலைகளையும் அப்புறப்படுத்தியதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடமாற்ற பணிகளும் நிறைவடைந்த பின்னர், நில உரிமையாளர் காலையில் அந்த இடத்தில் துப்புரவுப் பணிகளைத் தொடங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், நடைமுறையில் உள்ள சட்ட வழிகளை தொடர்ந்து மதிப்பதோடு, இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் சுயமாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஷாசேலி நினைவூட்டினார்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)