கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- Ryandaselva என்ற கணக்கின் வழி Threads சமூக ஊடகத்தில், al-Quran-னை மிதிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்த நபரின் நடவடிக்கையை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இச்செயல், இஸ்லாத்தை அவமதிப்பதாகவும், இந்நாட்டில் உள்ள பல்லின சமூகத்தின் உணர்வுகளுக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுக்கும் என்றும் அவர் விவரித்தார்.
இது தொடர்பில், 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் உடனடி விசாரணையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவும் M-C-M-C-க்கு ஒருமைப்பாட்டு அரசாங்க பேச்சளருமான அவர் உத்தரவிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)