மினாஸ் ஜெராய்ஸ், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- தென்கிழக்கு பிரேசிலில் Juiz de Fora நகரில், நேற்று, செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இடிபாடுகள் மற்றும் சேற்றில் இருந்து மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டனர்.
பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ்சைத் தாக்கிய கனமழையால் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததோடு, 43 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதிக மக்களை உட்படுத்திய மிகப்பெரிய பகுதி பாதிக்கப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக தீயணைப்பு வீரர் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தினால், Juiz de Fora நகரில் சுமார் 440 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)