உலகம்

ஆப்கான் - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே புதிய மோதல்கள்

25/02/2026 06:50 PM

நங்கர்ஹார்,  25 பிப்ரவரி (பெர்னாமா) -- கிழக்கு நங்கர்ஹார்,மாகாணத்தின் எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் புதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

சண்டை இன்னும் தொடரும் வேளையில், இரு தரப்பினரும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களினால், ஆப்கானிஸ்தானில் குறைந்தது 17 பேர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சண்டை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் உளவுத்துறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஏழு தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ளGardi Kas கிராமத்தில் உள்ள சில குடியிருப்பு கட்டிடங்கள் வான்வழித் தாக்குதல்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள வேளையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகள் தொடரப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)