அபு டாபி, மார்ச் 02 (பெர்னாமா) -- அண்மைய வட்டார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அபு டாபியில் உள்ள மலேசிய தூதரகம், மார்ச் இரண்டாம் தேதி, திங்கட்கிழமை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது.
அக்காலக்கட்டம் முழுவதும், நேரடி தூதரக சேவை எதுவும் வழங்கப்படாது என்று தூதரகம் அறிவித்துள்ளது.
ஆலோசனை மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, தூதரகக் குழுவை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அபு டாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் உதவிகள் தேவைப்படும் மலேசியர்கள் +971 50 614 6894 எனும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் mwabudhabi@kln.gov.my வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)