கோலாலம்பூர், மார்ச் 02 (பெர்னாமா) -- இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு தொடங்கி, 13-வது மலேசியத் திட்டம், RMK-13-இன் இணையத் தளத்தில், பொது அறிவிப்புப் பலகையை இணைப்பதன் மூலம், அத்திட்டத்தின் வியூகங்கள் மற்றும் நோக்கங்களின் அடைவுநிலை குறித்த அறிக்கையை அவ்வப்போது வெளியிடுவதற்கு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வோர் இலக்கின் முன்னேற்றத்தை மக்களே நேரடியாகக் கண்காணிக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நசிர் தெரிவித்தார்.
எந்தவொரு திட்ட தாமதமும் உடனடியாகக் கண்டறியப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட, 13-வது மலேசியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு செயல்முறை, MyRMK, தற்போது, பிரதமர் துறையின் செயல்படுத்துதல் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் MyProject அமைப்புடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாக அக்மால் கூறினார்.
"எனவே திட்டம் தாமதமானால், அது 13-வது ஆர்.எம்.கே-வில் அவற்றை அடைவதில் நமது இலக்குகளைப் பிரதிபலிக்கும்," என்றார் அவர்.
இது தொடர்பில், கோத்தா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்னாரைசா முனிரா மஜிலிஸ் இன்று மக்களவையில் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)