உலகம்

இந்தியாவில் விமரிசையாக ஹோலி கொண்டாட்டம்

05/03/2026 02:58 PM

உத்திர பிரதேசம், 05 மார்ச் (பெர்னாமா) --  நேற்று, இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையைக் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடியிருந்தனர்.

பாடல்களுக்கு நடமாடியும், தலை முதல் கால் வரை வண்ணங்களைப் பூசிக் கொண்டும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மக்கள் அனைவரும் சாதி வேறுபாடுகளை கைவிட்டு ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிச் ஹோலி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று அதில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

அண்மைய ஆண்டுகளில், சமூகச் சேர்க்கையும் மனித மரியாதையும் மேம்பட ஹோலி போன்ற திருவிழாக்களில் அவர்களின் பங்கேற்பை சமூக அமைப்புகளும் கோயில் நிர்வாகங்களும் ஊக்குவித்து வருகின்றன.

ஹோலிகா என்கிற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டும் வகையிலும், கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாகவும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)