பொது

80 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கார் விபத்து; ஆடவர் பலி

09/03/2026 01:51 PM

பகாங், 09 மார்ச் (பெர்னாமா) --  நேற்றிரவு பகாங் கெந்திங் செம்பாவிலிருந்து சிலாங்கூர் கோம்பாக் நோக்கிச் செல்லும் வழியில் கார் ஒன்று சுமார் 80 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இரவு மணி 10.46-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பெரோடுவா கன்சில் ரக காரில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படும் 56 வயது அந்நபர் பலத்த காயமடைந்ததாக அஹ்மாட் முக்லிஸ் முக்தார், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளத்தாக்கில் இருந்து அந்த ஆடவர் மீட்கப்பட்ட நிலையில், அவர் பின்னிரவு மணி 1.15-க்கு உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)