தெஹ்ரான், மார்ச் 09 (பெர்னாமா) -- ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்தொல்லா அல் கமெனி உயிரிழந்ததை அடுத்து, அவரின் மகன் மொஜ்தாபா காமெனி தற்போது அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
மொஜ்தாபா காமெனி நீண்ட காலமாகவே அப்பதவியை வகிக்க தகுதியானவராக கருதப்பட்டாலும், அரசாங்கத்தில் இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ பதவிக்கும் அவர் நியமிக்கப்பட்டதில்லை.
நாட்டின் உயர்மட்ட தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான 88 உறுப்பினர்களைக் கொண்ட மதகுருமார்கள் குழுவின் முடிவுக்காக நாடு காத்திருந்தது
இந்நிலையில், ஈரானிய அதிகாரிகளிடையே நிலவும் பிளவுகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது.
வலுவான வாக்குகளின் அடிப்படையில் மொஜ்தாபா தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறும் அறிக்கை ஒன்றை தேசிய தொலைக்காட்சி வாசித்த வேளையில், அவரின் தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தெஹ்ரானின் சில பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததும் ஒளிபரப்பப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)