உலகம்

ஈரான் மீதான போரினால் எரிசக்தி நெருக்கடி - புதின்

10/03/2026 05:16 PM

மாஸ்கோ, 10 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீதான போர் உலக அளவில் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஹொர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை நம்பியிருக்கும் எண்ணெய் விநியோகம் விரைவில் முழுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

அரசியல் நோக்கம் இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க விரும்பினால், அந்த நாடுகளுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற மாஸ்கோ தயாராக இருப்பதாக புதின் கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையினால் எண்ணெய் விலை உயர்வைத் தவிர்க்க இயலாது என்று புதின் விளக்கினார்.

ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ளது.

மேலும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்புக்களை அந்நாடு கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)