பொது

இனிப்புச் சோளம் & சோயா அவரை ஆராய்ச்சி; அமெரிக்காவுடன் ஒத்துழைக்க அரசாங்கம் திட்டம்

10/03/2026 05:46 PM

ஜாலான் பார்லிமன், 10 மார்ச் (பெர்னாமா) -- மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக இனிப்புச் சோளம் மற்றும் சோயா அவரை ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏனெனில், இனிப்புச் சோளம் மற்றும் சோயா அவரைகளின் முக்கிய உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

''அமெரிக்காவின் கூடுதல் நன்மைகளுடன், இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை தீவனத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, நவீன இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் விதை உற்பத்தியை இயந்திரமயமாக்குதல் ஆகியவற்றின் பரிமாற்றத்தின் மூலம் நாம் பயனடையலாம்,'' என்று அவர் கூறினார்.

விவசாயத் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுடனான மலேசியாவின் ஒத்துழைப்பு மூலம் விவசாய மாநிலங்கள், குறிப்பாக நெல் சாகுபடி செய்யும் கெடா எதிர்பார்க்கும் நன்மைகள் குறித்து செனட்டர் முசொட்டாக் அஹ்மாட் எழுப்பிய கேள்விக்கு Chan அவ்வாறு பதிலளித்தார்.

இருப்பினும், அமெரிக்கா முதன்மை அரிசி உற்பத்தியாளர் அல்ல, அதனால், ஒத்துழைப்பில் நெல் விவசாயிகள் சம்பந்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)