விளையாட்டு

இந்தியன் வெல்ஸ்; அரையிறுதிக்கு தேர்வு பெற்ற ஸ்வெரெவ்

13/03/2026 02:07 PM

கலிஃபோர்னியா, 13 மார்ச் (பெர்னாமா) --  இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் முதல் முறையாக தேர்வாகினார்,

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், அவர் பிரான்சின் ஆர்தர் ஃபில்ஸுடன் விளையாடினார்.

இந்த ஆட்டத்தை 6-2 6-3 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று, ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டத்தை ஒரு மணி நேரம் 22 நிமிடங்களில் ஸ்வெரெவ் கைப்பற்றினார்.

அரையிறுதி ஆட்டத்தில், அவர் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் யானிக் சின்னர் உடன் மோதவுள்ளார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் களமிறங்கிய யானிக் சின்னர் அமெரிக்காவின் லெனர் டீன்னுவுடன் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாத சின்னர், 6-1 6-2 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)