பொது

200 கோடி ரிங்கிட்டாக உயர்ந்த பெட்ரோலுக்கான அரசு உதவித்தொகை

13/03/2026 03:44 PM

புத்ராஜெயா, 13 மார்ச் (பெர்னாமா) --   எரிபொருளுக்கான உதவித்தொகை அதிகரித்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைப் பராமரிப்பதோடு, BUDI95 திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து உதவி பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு ஆசிய மோதலினால் ஒரு மாதத்திற்கு முன்பு 70 கோடி ரிங்கிட்டாக இருந்த பெட்ரோலுக்கான அரசு உதவித்தொகை, 200 கோடி ரிங்கிட்டாகவும், டீசலுக்கான அரசு உதவித்தொகை 120 கோடி ரிங்கிட்டாகவும் அதிகரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

''இருப்பினும், மடானி அரசாங்கம் மக்களுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்யும் அணுகுமுறையை எடுத்து வருகிறது. நம்மிடம் Budi 95 உள்ளது. Budi தனிநபர், Budi விவசாய பொருள்கள் ஆகியவற்றுடன் திட்டங்கள் உள்ளன. அவை மக்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தரும் என்று நான் நினைக்கிறேன்'', என்றார் அவர்.

மடானி அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி சீர்த்திருத்தங்கள் மற்றும் ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தியதன் விளைவாக தற்போது ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க முடிவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)