பாக்தாத், 17 மார்ச் (பெர்னாமா) -- ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நகரின் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பசுமை மண்டலப் பகுதிக்கு அருகே புகை சூழ்ந்தது தென்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாக்தாத்கான அமெரிக்க தூதரகம் பல வெளிநாட்டு அரசதந்திர பணிகள், அனைத்துலகக் கழகங்கள் மற்றும் ஈராக்கின் அரசாங்க அலுவலகங்கள் அப்பகுதியில் உள்ளன.
அதுமட்டுமின்றி, நாட்டின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வசிப்பிடமாகவும் அப்பகுதி உள்ளது.
வெடிப்புக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)