கூச்சிங், 21 மார்ச் (பெர்னாமா) -- சரவாக், கூச்சிங்கில் ஒற்றுமையும் உற்சாகமும் நிறைந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது.
கூச்சிங், அஸ்தானா நெகிரி வளாகத்தில் மாநில முதலமைச்சர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாக்பார் மற்றும் அவரின் துணைவியார் தொ புவான் ஃபௌசியா முஹமட் சனுசி, அந்த திறந்த இல்ல உபசரிப்பை ஏற்று நடத்தினர்.
இத்திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ளும் வகையில் காலை மணி 9 அளவில் மக்கள் அங்கு கூடத் தொடங்கினர்.
சமூகத்தின் பலதரப்பட்ட வயது, இனம் மற்றும் மதத்தைச் சேர்ந்த விருந்தினர்களுக்குப் பல்வகை உணவுகள் பரிமாறப்பட்டதோடு, அவர்கள் மாநிலத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெற்றனர்.
இதனிடையே, இவ்வாண்டு நோன்புப் பெருநாளை மிதமான அளவில் கொண்டாடும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மேற்காசியாவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)